கொரோனா வைரஸ்; 50 நாட்கள், 2,000 மரணங்கள் – தொடரும் வேதனை. Covid19

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 கடந்துள்ளது.

சீனா உள்ளிட்ட 25 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி 50 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் முனைப்பு காட்டி வருகின்றன. நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவில் நேற்று ஒரே நாளில் 132 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 2,004 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஹூபே மாகாணத்தில் 93 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 74,185 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. அதேபோல், 1,693 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹாங்காங்கில் இருந்து 2500 பயணிகள், ஊழியர்களுடன் ஜப்பான் துறைமுகத்துக்கு சென்ற டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருந்து, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத 500 பேர் 14 நாட்களுக்குப் பிறகு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் பரிசோதனைக்கு பின்னர் கப்பலில் இருந்து இறங்க அனுமதிக்கப்படுவார்கள் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

What do you think?

சிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு வைகோ இரங்கல்

தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் CAA எதிர்ப்பு போராட்டம்