கொரோனா பலி எண்ணிக்கை 10, 000 தாண்டியது!

உலகளவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 10,000 தாண்டியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸிற்கு சரியான மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றனர். மேலும் இந்த கொரோனா வைரஸை தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் உலகளவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 10, 000 தாண்டியுள்ளது. தற்போது வரை கொரோனா வைரஸால் 10, 035 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2, 44, 979ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 3,405 பேரும், சீனாவில் 3, 245 பேரும் உயிரிழந்துள்ளனர்.

What do you think?

‘இயற்கை எரிகாற்று எத்தனை வீடுகளுக்குத் தரப்படுகின்றது?’ வைகோவின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

‘கூட்டாக செயல்பட்டு கொரோனாவை வெற்றி கொள்வோம்’ வைகோ!