கொரோனா இந்தியாவில் உயிரிழப்பு 5-ஆக அதிகரிப்பு!!!

நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதுவரை கொரானாவிற்கு 10,048 நபர்கள் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 2,45,670 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 88,441 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 47 பேரும், கேரளாவில் 27 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 19 பேரும் தமிழகத்தில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலியைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

What do you think?

‘கூட்டாக செயல்பட்டு கொரோனாவை வெற்றி கொள்வோம்’ வைகோ!

‘நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது, பொள்ளாச்சி வழக்கில்?’ கேள்வி எழுப்பும் கார்த்தி!