‘கொரோனாவின் கொடூரம்’ ஸ்பெயினில் 120 பேர் பலி!

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 120 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் 120க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5, 043 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1, 34, 300-க்கும் அதிகமானோர் பாதிக்கபட்டுள்ளனர்.

குறிப்பாக சீனாவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலியில் மட்டும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால்  1,016 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15, 113 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

இந்நிலையில், இத்தாலியை தொடர்ந்து மற்றுமொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்பெயினில் இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4, 209 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

What do you think?

‘கொரோனா அச்சம்’ அமெரிக்க விசா நிறுத்தி வைப்பு!

‘மத்திய அரசின் முடிவால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்’ பொதுமக்கள் அதிர்ச்சி!