இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் இந்தியாவில் 150க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே டெல்லி,மகராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த கொரோனா வைரஸால் உயிரிழந்த நிலையில் தற்போது பஞ்சாப்பிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 72 வயதான முதியவர் ஒருவர் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

What do you think?

“போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை” – அமைச்சர் உதயக்குமார்

‘கொரோனா வைரஸ்’ வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவிற்குள் வர தடை!