பங்குச்சந்தையை வீழ்த்திய கொரோனா வைரஸ்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது

கொரோனா வைரஸ் தாக்குதலால், சர்வதேச அளவில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை இன்று காலை கடும் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் ஆயிரத்து 417 புள்ளிகள் சரிந்து, 36 ஆயிரத்து 159 புள்ளிகளாக வர்த்தகமானது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 391 புள்ளிகள் குறைந்து, பத்தாயிரத்து 599 புள்ளிகளாக உள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

யெஸ் வங்கிக்கு எஸ்.பி.ஐ., வங்கி உதவிக்கரம் நீட்டியதன் எதிரொலியாக அந்த வங்கியின் பங்கு மதிப்பு 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் எஸ்.பி.ஐ. வங்கியின் பங்கு மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.

What do you think?

‘ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தின் டீசர் வெளியானது!

கொரோனா வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை – விஜயபாஸ்கர்