கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது! – 10 ரூபாய்க்கு காய்கறி விற்பனை

கொரோனாவால் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் கோயம்பேட்டில் இயங்கி வரும் காய்கறி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவு படி ஏற்கனவே கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு தேவையான காய்கறிகளும் தேவையான பொருட்களும் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து மக்களுக்கு அன்றாட தேவைகளான காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோட்டக்கலை சார்பில் மக்களுக்கு தேவையான காய்கறிகளை இன்று முதல் விற்பனைக்கு வைக்கப்படுவதாக தோட்டக்கலை உதவி அலுவலர் ஜம்புலிங்கம் தெரிவித்தார்.

மேலும், தோட்டக்கலை தோட்டத்தில் விளைந்த முட்டைகோஸ், வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்கள் கிலோ 10 முதல் 30 ரூபாய்க்கு தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் தேவையை பொருத்து மற்ற காய்கறிகள் தோட்டக் கலை சார்பாக விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேவை அதிகரிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை சார்பாக விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோயம்பேட்டில் கடைகள் மூடப்படுவதால் குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

What do you think?

‘சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா’ அமைச்சர் அதிர்ச்சி தகவல்!

மாஸ்டர் படத்தில் விஜய்யின் பெயர் இதுவா?