AngryAngry CryCry OMGOMG WTFWTF

தமிழகத்தில் 37 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் 37 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பீதியை கிளப்பிவரும் நிலையில், இந்தியாவிலும் 100-க்கும் மேற்பட்டோர் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 3-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டமான கன்னியாகுமரியில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக உறுதியாகியுள்ளது. மணக்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உட்பட 3 பேர் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சென்னை பூந்தமல்லியில் 14 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 2 பேரும் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

What do you think?

-2 points
Upvote Downvote

கொரோனா வைரஸ் – வேடந்தாங்கல் சரணாலயம் மூடல்

கொரோனா வைரஸ் தடுப்பூசி; மனிதர்களிடம் பரிசோதனை!