கொரோனா : தொடர் போராட்டங்கள் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் பரவி வருவதால் சிஏஏவுக்கு எதிரான தொடர் போராட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி சட்டங்களுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 30 நாட்களை கடந்து போராட்டத்தை தொடரும் நிலையில், அந்த போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக இஸ்லாமிய கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் பேராசிரியர் ஜவாஹிருல்லா, காஜா மொய்தீன் பாகவி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய காஜா மொய்தீன் பாகவி, கொரோனா வைரஸ் பரவி வருவதால் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டங்களை தமிழகம் முழுவதும் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் எனக் கூறினார்.

சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி சட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முயன்றால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இஸலாமியர்களை திரட்டி ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அவர் கூறினார்.

What do you think?

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு

கொரோனா – சட்டப்பேரவைக்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை