மிரட்டும் கொரோனா; வெறிச்சோடிய சென்னை!

சென்னையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகின்ற 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்கம், பூங்கா உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் வழக்கமாக பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையம், வணிக வளாகம், ரயில் நிலையம், திரையரங்கம், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

What do you think?

டி-20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடிப்பார் – பிராட் ஹாக்

கொரோனாவால் அமேசானில் 1 லட்சம் பேருக்கு வேலை!