CryCry

கொரோனா வைரஸ் – சென்னையில் ரயில், விமானங்கள் ரத்து!

கொரோனா வைரஸ் காரணமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 62 விமானங்கள், 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகளவில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பயணிகள் போக்குவரத்து பெரும்பாலும் முடங்கியுள்ளதால், சென்னை சர்வதேச விமான நிலையம், உள்நாட்டு விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

எனவே போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், 46 சர்வதேச விமானங்கள் உட்பட 62 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல், மதுரை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய 5 உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லவிருந்த 14 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா அச்சத்தால் பயணிகள் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளதால், தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

What do you think?

“பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடும் எண்ணமில்லை” – ரவிசங்கர் பிரசாத்

இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர்!