கொரோனா பீதியில் மாட்டு கோமியம் குடித்த இந்து மகா சபா நிர்வாகிகள்

கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக அகில பாரத இந்து மகா சபை நிர்வாகிகள் மாட்டு கோமியத்தை குடித்த செயல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமெடுத்துள்ளது. இதுவரை இந்நோய் தொற்றால் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இருவர் உயிரிழந்துள்ளனர். இன்னும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை, இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா வைரஸுக்கு சிறந்த தடுப்பு மருந்து மாட்டு கோமியம் தான் என்று, இந்து மகாசபா தலைவர்களும் பாஜகவைச் சேர்ந்தவர்களும் கூறி வந்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் மாட்டு கோமியத்தை அருந்தும் நிகழ்ச்சியை தற்போது நடத்தியுள்ளனர்.

இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுமையான முறையில் விமர்சித்தும், கேலி செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.

What do you think?

‘இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை’ பொதுமக்கள் மகிழ்ச்சி!

‘வருமுன் காப்பதே சிறந்தது’ கொரோனா குறித்து கோலியின் டிவிட்!