கொரோனா எச்சரிக்கை – பத்ம விருதுகள் விழா ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் பரவியுள்ள இந்த நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, மால்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருது வழங்கும் விழா கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் இந்த விருது விழா ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது தேதி அறிவிக்கப்படாமல் பதம விருது வழங்கும் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

What do you think?

டெல்லியில் ஆலங்கட்டி மழை….!

‘2 ரூபாய்க்கு முகக்கவசம்’ கொச்சி மருந்துக்கடையை பாராட்டும் மக்கள்!