கொரோனா – சட்டப்பேரவைக்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

தமிழக சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என சபாநாயகர் ப.தனபால் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதையொட்டி அவைக்கு சென்ற எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும்  INFRARED Thermometer கொண்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது, தலைமைச்செயலக ஊழியர்கள் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை எம்.எல்.ஏக்களுக்கு வழங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவை வளாகம் முழுவதும் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.

இதனிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்படுதவாக சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார். மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு நடைமுறையில்இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

What do you think?

கொரோனா : தொடர் போராட்டங்கள் ஒத்திவைப்பு

மதிமுக 28-வது பொதுக்குழு ஒத்திவைப்பு!