தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 – ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதில் 2 பேர் தாய்லாந்திலிருந்து வந்தவர்கள் என்றும் ஒருவர் நியூசிலாந்திலிருந்து வந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

What do you think?

இந்தியாவில் 300ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!

‘அசட்டு தைரியம் வேண்டாம்’ – கமல்ஹாசன் வேண்டுகோள்