இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 147 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 7,988 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1, 98, 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இதனை அதிகாரபூர்வமாக அதிகரித்துள்ளது. இந்த கொரோனா வைரஸால் மொத்தம் 130 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 பேர் குணமடைந்துள்ளதாகவும் மற்றும் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்மாக மகாராஷ்டிராவில் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 27 பேரும், உத்தர பிரதேசத்தில் 16 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியாணா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 16 பேரில் 14 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆகும்.

கர்நாடகாவில் 11 பேரும், டெல்லியில் 10 பேரும்,லடாக்கில் 8 பேரும், தெலங்கானாவில் 5 பேரும், ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தானில் தலா 3 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தவிர தமிழகம், ஆந்திரா, ஒடிசா, உத்தரகண்ட், பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

What do you think?

‘யாரும் வராதீங்க’ கொரோனாவால் வீட்டின் முன்பு போர்டு வைத்த செங்கோட்டையன்

கொரோனா விழிப்புணர்வு – கேரள போலீசாரின் அசத்தல் நடனம்