கொரோனாவை எதிர்கொள்ள தமிழகத்திற்கு 987 கோடி நிதி!

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தமிழகத்திற்கு ரூ.987 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமெடுத்துள்ள கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாளை சுய ஊரடங்கு உத்தரவினை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதுவரை இந்தியாவில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தமிழக அரசுக்கு ரூ.987 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

What do you think?

புதுவையில் மார்ச் 31 வரை 144! – கொரோனா அப்டேட்

‘தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவு’ அனைத்து சேவைகளும் முடக்கம்