இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகா மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வருட பிறப்பு கொண்டாட்டங்கள் இரவு ஒரு மணியுடன் முடிவுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையே முடக்கிய கொரோனா ஒரு வருடமாக அதன் தீவிரம் குறைந்தது இதனால் உலக நாடுகள் மற்றும் இந்தியாவிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.இதனால் உலகமே மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில் மீண்டும் கொரோனாவின் புதிய வகை பிஎப் 7 என்ற வைரஸ் ஸேனா,அமெரிக்கா,பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, கர்நாடகாவில் சுகாதாரத்துறை கொரோனாவின் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. திரையரங்குகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் முகக்கவசம் அணிவதை கட்டயமாகியுள்ளது. மேலும், புதிய வருட பிறப்பை கொண்டாட இரவு 1 மணி வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.