AngryAngry CryCry

ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ்? – புதிய சிக்கலில் இந்திய பொருளாதாரம்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் வழியாகவும் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பொதுமக்களை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் வுஹான் நகரில் இறைச்சி கடை கழிவுகளில் இருந்து உருவாகியதாக கூறப்படும் கொரோனா வைரஸ், தற்போது உலகையே மிரட்டி வருகிறது. இதுவரை இந்நோய் தொற்றால் உலகம் முழுவதும் 7,499 பேர் உயிரிழந்துள்ளனர், 1 லட்சத்து 88 ஆயிரத்து 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனாவால் இன்று வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர், 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் இந்த நோய் தொற்று பரவுவதை தடுக்க வழி தெரியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர். இதனால், தற்சமயம் ஒருவருக்கொருவர் கை குலுக்குவதை தவிர்த்து வருகின்றனர்.

இருமல், தும்மல் வரும்போது வாயை பொத்திக்கொள்ளாவிட்டால் ‘எச்சில் மூலம் அதிகம் பரவும் ஆபத்து உள்ளது’. இந்நிலையில், கொரோனா வைரஸ் மக்கள் தினமும் கையாளும் ரூபாய் நோட்டுகள், சில்லறை நாணயம் மூலமாகவும் பரவும் அபாயம் இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.

இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் மற்ற நாடுகளிலும் இதே நிலைதான் என்றும் கூறப்படுகிறது. இதனால் அரபு நாடுகளில் பணத்தை நேரடியாக கையாள்வதற்கு பதிலாக டிஜிட்டல் பணபரிமாற்றத்தில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியாவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகளை கையாள்வதன் மூலம் எந்த அளவுக்கு நோய் பரவும் என்பதை மதிப்பிடுவதற்கு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய வர்த்தகங்கள் நிதி அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

பேருந்துகள், ஹோட்டல்கள், இறைச்சி கடைகள், மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஆகியவற்றை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What do you think?

கொரோனா வைரஸ் தடுப்பூசி; மனிதர்களிடம் பரிசோதனை!

கொரோனா – மருத்துவர்களுக்கு 24 மணி நேர பணி