‘கொரோனா அறிகுறியுடைய நபர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்’ போலீசார் தீவிர தேடல்!

கர்நாடகாவில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் தப்பியோடியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு மேலாக பரவியுள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு 39 பேருக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் கேரளாவில் மட்டும் 6 பேர் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயிலிருந்து கர்நாடகா மாநிலம் மங்களூர் விமான நிலையத்துக்கு வந்துள்ளார். அவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறியும் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் மங்களூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கான தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், தனக்கு கொரோனா பாதிப்பு இல்லையென அந்த நபர் மருத்துவமனை ஊழியர்களிடமும், மருத்துவர்களிடமும் தொடர்ந்து கூறிவந்துள்ளார். மேலும் தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் அதற்கு மருத்துவர்கள் செவிசாய்க்காத நிலையில் இரவு நேரத்தில் மருத்துவமனையிலிருந்து அந்த நபர் தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையின் அதிகாரிகள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். இப்போது மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய அந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

What do you think?

‘அவளை கண்ணீருடன் பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது’ பிரெட்லீ வேதனை!

‘ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தின் டீசர் வெளியானது!