‘கொரோனா எதிரொலி’ உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து!

கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமான சேவையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 15,306 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது .

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 19 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விமானச் சேவைகள் மற்றும் பெரும்பான்மை ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமானச் சேவையையும் மார்ச் 24 நள்ளிரவு முதல் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் குறிப்பிடபட்டுள்ளது.

What do you think?

டோக்கியோவால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு?

‘கொரோனா அச்சம்’ மூலிகை மருந்தை உட்கொண்ட குடும்பத்தினருக்கு வாந்தி, மயக்கம்!