‘அதிபர் டிரம்பிற்கு கொரோனாவா?’ வெளியானது மருத்துவரின் அறிக்கை!

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கையை மருத்துவர்கள் வெளியிட்டனர்.

உலகம் முழுவதும் 145 நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் அமெரிக்காவில் வைத்து நாய்ப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் மைக் பென்சி மற்றும் பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனரோ பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டு அதிபரின் தகவல் தொடர்பு செயலாளர் பஃபியோ வஜ்ஹர்டினும் பங்கேற்றார். நிகழ்ச்சியின்போது பிரேசில் மற்றும் அமெரிக்க அதிபருடன் பஃபியோ வஜ்ஹர்டினுடன் கைகுலுக்கி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

பின்பு நாடு திரும்பிய பஃபியோ வஜ்ஹர்டினுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவருடன் கைகுலுக்கிய அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. மேலும் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூடிய விரைவில் கொரோனா பரிசோதனை செய்வேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வெள்ளைமாளிகையில் வைத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

இந்த பரிசோதனையின் முடிவை வெளியிட்ட மருத்துவர் அதில் ”அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கொரோனா வைரஸ் பரவவில்லை என்றும் ஆரோக்கியமாக இருப்பதாகவும்” அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதே போல் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

What do you think?

‘2 ரூபாய்க்கு முகக்கவசம்’ கொச்சி மருந்துக்கடையை பாராட்டும் மக்கள்!

‘கொரோனா வைரஸ்’ தொடக்கம் முதல் இன்று வரை!