‘கனடா பிரதமரின் மனைவிக்கும் கொரோனா வைரஸ்’ பொதுமக்கள் அதிர்ச்சி!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோரிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 4, 600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸால் பல நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மிகவும் பிரபலமான வெளிநாட்டு பிரதமரான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோரிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் தகவல் தொடர்பு இயக்குனர் கேமரான் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சோபி கிகோரிக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார். அவருக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் அறிகுறிகள் தென்படுவதால், பரிந்துரைக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்” என்று அதில் குறிப்பிட்டார்.

மேலும் “பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மருத்துவர்களின் ஆலோசனையின்பேரிலும், அவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அறிகுறிகள் இல்லாததால் அவருக்கு எந்த பரிசோதனையும் செய்யப்பட மாட்டாது. எனவே, சமீபத்தில் அவருடன் தொடர்பு கொண்டவர்களுக்கு கொரோனா ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் கூறுவதாகவும்” அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிரதமரின் மனைவிக்கு கோரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

What do you think?

“கொரோனா பயத்திற்கு NO சொல்லுங்கள்” பிரதமர் மோடி!

‘கொரோனாவால் இந்திய பங்குசந்தைகள் வரலாறு காணாத சரிவு’ வர்த்தகம் நிறுத்தம்!