இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இதுவரை 123 நாடுகளில் பரவியுள்ளது. இந்த கொரோனா வைரஸால் உலகளவில் 4,627 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1, 29 ,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கபட்டுள்ள தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பொதுமக்களிடையே கொரோனா குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

What do you think?

‘எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா வைரஸ்’ பிரபல ஹாலிவுட் நடிகர் பகீர் தகவல்!

‘தமிழக மக்கள் கேரளாவுக்கு செல்லவேண்டாம்’ அமைச்சர் எச்சரிக்கை!