கொரோனா வைரஸ் தேசிய பேரிடராக அறிவிப்பு!

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீனாவிலிருந்து பரவி வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 5000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் இந்த கொரோனா வைரஸால் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4லட்சம் நிதியுதவி வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

What do you think?

‘விஜய்யின் Punch Dialogue- யை பேசும் விஜய்சேதுபதி’ ரசிகர்களுக்கு செம Treat!

தொப்பி, தாடி வச்சிருந்தா தீவிரவாதியா? – வேல்முருகன் பாய்ச்சல்