‘எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா வைரஸ்’ பிரபல ஹாலிவுட் நடிகர் பகீர் தகவல்!

Mandatory Credit: Photo by David Fisher/Shutterstock (10525963jj) Tom Hanks and Rita Wilson 26th Annual Screen Actors Guild Awards, Arrivals, Shrine Auditorium, Los Angeles, USA - 19 Jan 2020

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் இன்று வரை உலகளவில் 4, 627 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இது உலகளவில் 123 நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸையும் தாக்கியுள்ளது.

Forrest gump,SavingPrivateRyan,CastAway மற்றும் CaptainPhillips உள்ளிட்ட பல படங்களில் நடித்து உலகளவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார் டாம் ஹாங்ஸ்.

இந்நிலையில் இவர் தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் ஹாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

What do you think?

விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆக உயர்வு!