‘அமெரிக்காவையும் விட்டுவைக்காத கொரோனா’ 11 பேர் பலி!

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த 8.3 பில்லியன் டாலர் நிதி வழங்க முடிவு.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பொது மக்களிடம் மிகப்பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால் 3200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா மட்டுமில்லாது 80 நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அந்தவகையில் அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸால் 11 பேர் பலியாகியுள்ளனர். இதில் வாஷிங்டனை சேர்ந்த 10 பேரும், லாஸ் ஏஞ்சல்சில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்தி, மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக 8.3 பில்லியன் டாலர் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டு அந்த தீர்மானம் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இன்று செனட் சபையில் இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

What do you think?

‘ரசிகர்கள் வேண்டாம்’ விஜய் எடுத்த அதிரடி முடிவு!

‘பிஸ்கோத்’-ஆன சந்தானம் – First Look பரபர..!