தமிழகம் வந்திறங்கியது கொரோனா! – காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு தீவிர சிகிச்சை

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் மிரட்டி வருகிறது, இதுவரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸால் இதுவரை 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவையும் கடந்து உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த நோய் தொற்றால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவிலும் பரவிய கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மத்திய சுகாதரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ குமார், “ஓமனிலிருந்து இந்தியா திரும்பிய தமிழர் ஒருவர், இரானில் இருந்து லடாக் வந்த இரண்டு பேர் என மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள தமிழர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இவருக்கு வயது 45, தற்போது இவருக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதம் கடைசியில்தான் சென்னையிலிருந்து ஓமனுக்குச் சென்றுள்ளார். மீண்டும் சென்னை திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

சச்சின், சேவாக், யுவராஜ் : டி-20 போட்டியில் புதிய அவதாரம்

‘சென்னையில் 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி’