ஆயிரத்தை கடந்தது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை !!!

சீனா முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1016-ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இதுவரை எவ்வித தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்க முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கியதில் இன்று வரை 1016 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

2002 ஆம் ஆண்டில் சார்ஸ் வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை விட, தற்போது பரவியுள்ள கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ராம்ப், குளிர் காலங்களில் பரவும் இத்தகைய வைரஸ், கோடை காலத்தின்போது முற்றிலும் அழிந்துவிடும் என்று கூறியுள்ளார். இதுபோன்ற வைரஸால் அதிக வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாது, இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார். இருப்பினும் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதை மருத்துவ ரீதியாக கூற முடியாது என அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

What do you think?

டெல்லியில் ஆம் ஆத்மி முன்னிலை; பாஜகவுக்கு பின்னடைவு

இடஒதுக்கீடு தொடர்பாக நாடுதழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு..!