தொடரும் கொரோனா அச்சுறுத்தல்! – சீனாவில் 500க்கும் மேற்பட்டோர் பலி

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று (பிப்-6) வரை 563 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சீனாவின் வுஹான் நகரத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலகிலுள்ள 25 நாடுகளுக்கும் பரவியுள்ளது. மற்ற நாடுகளை விடவும் சீனாவை அதிகமாக அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இதுவரை, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (பிப்-6) வரை 563 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கொடிய வைரஸ் பரவ தொடங்கிய ஹூபே மாகாணத்தில் மட்டும் கடந்த புதன் கிழமையன்று 70 பேர் உயிரிழந்துள்ளனர். இது சீனாவில் அதே தினத்தில் நிகழ்ந்த கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் சுமார் 80% என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

இறுதிகட்ட படப்பிடிப்பில் தனுஷின் கர்ணன்

‘செருப்பை கழட்டி விடுடா’ – கட்டளையிட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!