Madhimugam
Exclusive Today Trending உலகம்

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் உயிரிழப்பு, சீனாவில் 636 பேர் பலி!

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 636-ஆக அதிகரித்துள்ளது.

நோவல் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 31 ஆயிரத்து 161 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று சீனா உறுதிபடுத்தியுள்ளது. வியாழக்கிழமை வரை ஆயிரத்து 540 பேர் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. சார்ஸ் வைரஸின் 70 சதவிகிதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கொரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய ‘கொரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

“எழுவர் விடுதலையில் உத்தரவிடும் அதிகாரம் எங்களுக்கு இல்லை”! : தமிழக அரசு வைவிரிப்பு

Digital Team

40 சதவிகித டயர்கள் தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது – முதலமைச்சர் பெருமிதம்!

Digital Team

தொடரும் சோகம்; கொரோனா வைரஸ் பலி 717 ஆக அதிகரிப்பு!!!

Digital Team

பொது பாதுகாப்பு சட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

Digital Team

இந்தியாவை பழிதீர்த்த நியூசி, 2 – 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்!

Digital Team

“விவசாயிகளுக்கு கடன் இல்லை என்ற நிலை வராது” – செல்லூர் ராஜூ உறுதி

Digital Team
You cannot copy content of this page
Madhimugam