தொடரும் கொரோனா வைரஸ் மரணம்; பலி எண்ணிக்கை 1662 ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1662 ஆக அதிகரித்துள்ளது. இதில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.

டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ், படிப்படியாக அந்நாடு முழுவதும் பரவியது. மேலும், சீனாவை கடந்து இந்த வைரஸ் உலகின் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்தவும், இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கவும் உலக சுகாதார மையம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஆனாலும் இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1662 ஆக அதிகரித்துள்ளது. முக்கியமாக கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர்கள் 6 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 68,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், அங்குள்ள மருத்துவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.

What do you think?

புலியை தில்லாக படம் பிடித்த தோனி – வைரலாகும் புகைப்படம்

அனுஷ்காவின் புதிய காதல் – அதிச்சியில் பிரபாஸ்