கொரோனா வைரஸ் – நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபே மாகாண தலைநகர், வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங், ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது. நேற்று ஒரே நாளில் 124 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,491 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 65,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் பீதி காரணமாக சீனாவுக்கு சென்று திரும்பிய டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருக்கும் சுமார் 3700 பேரை, ஜப்பான் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. யோகோஹமா பகுதியில் கடந்த 4ம் தேதி முதல் அந்த கப்பல் நிறுத்தப்பட்டு, அதில் இருப்போர் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பரிசோதனையில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக, ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 219-ஆக அதிகரித்துள்ளது.

What do you think?

‘கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கூறியிருக்கக்கூடாது’ – அமித்ஷா ஒப்புதல்!

11 எம்.எ.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்