February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending உலகம் மருத்துவம்

கொரோனா வைரஸ் உயிரிழப்பு 1,110 ஆக அதிகரிப்பு!

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,110ஆக அதிகரித்துள்ளது.

சீனாவைத் தொடர்ந்து ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 1,110-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 44,200க்கும் அதிகமானோருக்கு சீனா முழுவதும் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜப்பான் துறைமுகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் 8 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இதுவரை 174 பேருக்கு கொரோனா தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரத்திற்கு முன், ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் சென்ற டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் 57 நாடுகளைச் சேர்ந்த 2,700 பயணிகளும் சுமார் 1,000 ஊழியர்களும் பயணம் செய்தனர். முன்னதாக கடந்த மாதம் 25-ஆம் தேதி ஹாங்காங்குக்கு வந்தடைந்தபோது. அதில் பயணம் செய்த ஹாங்காங்கைச் சேர்ந்த 80 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து யோகோஹமா துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டு அனைவருக்கும் தினசரி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது174 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

சிங்காரச் செல்வன் சீமானின் ‘ஏய் பொண்டாட்டி’ – தம்பிகள் அதிர்ச்சி!

Digital Team

“நித்யானந்தாவின் ஆன்மீக ஆராய்ச்சிக்கு நான் ரெடி” – மீரா மிதுன் அதிரடி

Digital Team

ராஷ்மிகாவிற்கு ஷாக்கிங் முத்தம் கொடுத்த ரசிகர் – வைரல் வீடியோ

Digital Team

தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்பு

Digital Team

ஐபிஎல் 2020 : முதல் போட்டியில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் மோதல்

Digital Team

வேலைவாய்ப்புகள் குறித்த வைகோவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam