கொரோனா – மருத்துவர்களுக்கு 24 மணி நேர பணி

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருத்துவர்களை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் 15 மாநிலங்களில் கொரோனா வைரஸூக்கு 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அருணாச்சலப்பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது, கொரோனா சோதனைக்கு சுழற்சி முறையில் மருத்துவர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என அம்மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 100 விழுக்காடு சோதனை என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர் அகிய அண்டை நாட்டு எல்லையில் சோதனைகளை தீவிரப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள புராதானச் சின்னங்களை மார்ச் 31 ஆம் தேதி வரை மூடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து குதும்பினார், செங்கோட்டை, மாமல்லபுரம் கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதான பகுதிகள் மூடப்பட்டுள்ளன. 

What do you think?

ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ்? – புதிய சிக்கலில் இந்திய பொருளாதாரம்!

‘கொரோனா முன்னெச்சரிக்கை’ 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொண்ட பாஜக எம்பி!