கொரோனாவால் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடரும் ரத்து!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் கொரோனா வைரஸ் பரவுவதால் ரத்து.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதாக இருந்தது. நேற்று நடைபெறவிருந்த இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் லக்னோ மற்றும் கொல்கத்தாவில் வைத்து நடைப்பெறவிருந்த 2வது, 3வது ஒருநாள் போட்டி கொரோனா வைரஸ் பரவுவதால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஒருநாள் தொடரும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

‘கையில் டென்னிஸ் ராக்கெட், இடுப்பில் மகன்’ வைரலாகும் சானியா மிர்சாவின் புகைப்படம்!

கொரோனா வைரஸ் குறித்து அமிதாப் பச்சன் வெளியிட்ட வீடியோ….!