‘கொரோனா வைரஸ்’ தொடக்கம் முதல் இன்று வரை!

சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 127 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 85 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா பாதிப்பு குறித்து சேகரித்த தகவலில்படி தெரிந்த உண்மை என்னவெனில்

  1. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களில் இதுவரை இறந்தோர் தொகை 5839. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,745
  2. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் இதுவரை 3.4 விழுக்காட்டினர் இறந்திருக்கின்றனர். இது மிகப்பெரிய எண்ணிக்கை. ஏனென்றால், வழக்கமாய் வரும் புதுக்காய்ச்சல்களில் நோய்க்கு ஆளானவர்கள் ஒரு விழுக்காடு அளவுக்கே இறந்திருக்கின்றனர்.
  3. நோயாளிகளின் எண்ணிக்கையின்படி முதலிடத்தில் சீனாவும், இரண்டாமிடத்தில் இத்தாலியும், மூன்றாமிடத்தில் ஈரானும் இருக்கின்றன. சீனாவில் இறந்தோர் எண்ணிக்கை 3189. இத்தாலியில் இறந்தோர் எண்ணிக்கை 1266. இரு நாடுகளிலும் இதற்கு நிகரான தொகையினர் கடைசிப் கட்ட போராட்டத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
  4. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையின்படி இந்தியா நாற்பத்து எட்டாம் இடத்தில் இருக்கிறது. இங்கே நோய்த்தொற்று கண்டறியப்பட்ட எண்பத்து நால்வரில் இருவர் இறந்திருக்கின்றனர்.
  5. இறந்தவர்களில் அகவை அறுபதுக்கு மேற்பட்டவர்கள் மிகுதி. இறந்தோரில் எண்பது விழுக்காட்டினர் அவர்கள்தாம். முன்பே இதய நோயுடையார், சருக்கரை மிகுந்தவர்கள், மூச்சு இடர்ப்பாடுடையோர், மிகைப்பதற்றம் உள்ளவர்கள் இந்நோயினால் இறந்திருக்கின்றனர்.
  6. காய்ச்சல், இருமல், மூச்சு விடுதலில் இடர்ப்பாடு ஆகியன நோயின் முதன்மை அறிகுறிகள்.
  7. பிப்ரவரித் திங்களில் நாள்தோறும் இறந்தோர் எண்ணிக்கை நூற்றின் அருகில் இருந்தது, தற்போது சில நாள்களாக முந்நூற்றைத் தாண்டி நானூற்றினில் சென்றுக்கொண்டிருக்கிறது. நேற்றைக்கு இன்று இறந்தோர் எண்ணிக்கை எட்டு விழுக்காடு அளவுக்குக் கூடுகிறது.
  8. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆண்கள். மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே பெண்கள்.
  9. இதுவரை நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 73731.
  10. எந்நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நிலைமை கையை மீறிப்போனால் என்னாகும் என்றொருபகுதி இருக்கிறது. அதனைப் படிக்கவே முடியவில்லை. நோயின் தாக்கம் பல திங்கள்களுக்கு அல்லது ஆண்டு முழுக்கவும் இருக்கக்கூடும்.

இந்த கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது ஆயிரத்தில் இருப்பது கூடிய விரைவில் லட்சத்தில் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

What do you think?

‘அதிபர் டிரம்பிற்கு கொரோனாவா?’ வெளியானது மருத்துவரின் அறிக்கை!

‘திரையரங்குகள், வணிக வளாகங்களை மூடுங்கள்’ முதலமைச்சர் உத்தரவு!