கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; இந்தியாவில் இறைச்சிக்கு கட்டுப்பாடு?

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன், இறைச்சி விற்பனைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. மனித உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. வுகான் நகரில் உள்ள இறைச்சிக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதனால் இந்தியாவில் இறைச்சி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இறைச்சி விற்பனைக் கூடங்களுக்கான சட்ட விதிகளில் திருத்தம் செய்து, புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட உள்ளன. நாடு முழுவதும் உள்ள உணவுகளை ஆய்வு செய்ய புதிதாக 2 ஆய்வு கூடங்களும், வெளிநாடுகளில் இருந்து வரும் உணவுகளை ஆய்வு செய்ய புதிதாக 4 ஆய்வு கூடங்களும் உருவாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

What do you think?

மது குடிப்பது அதிகரித்ததால், வருவாயும் அதிகரிக்கும்! – அமைச்சரின் அடடே விளக்கம்

காவலர் தேர்வு முறைகேடு; சிபிசிஐடி விசாரணைக்கோரி வழக்கு