OMGOMG

கொரோனாவால் அமேசானில் 1 லட்சம் பேருக்கு வேலை!

ஆன்லைனில் குவிந்துவரும் ஆர்டர்களுக்கு ஏற்ப பொருட்களை விநியோகம் செய்ய 1 லட்சம் ஊழியர்கள் தேவைப்படுவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் பெரும்பாலான நாடுகளில் ஆன்லைன் வர்த்தகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசானிலும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. ஆனால், ஆன்லைனில் வரும் முன்பதிவுகளுக்கு ஏற்ப பொருட்களை விநியோகிக்க ஆட்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் தேவைப்படுவதாக அமேசான் அறிவித்துள்ளது. இதேபோன்று இந்தியாவிலும் ஆன்லைன் முன்பதிவு பொருட்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவதாகவும் ஆன்லைன் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதால் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

What do you think?

மிரட்டும் கொரோனா; வெறிச்சோடிய சென்னை!

கொரோனா வைரஸ் பரவியதாக போலி பிரேக்கிங் நியூஸ் – 3 இளைஞர்கள் கைது