கொரோனா வைரஸ் – வேடந்தாங்கல் சரணாலயம் மூடல்

கொரோனா வைரஸ் எதிரொலியால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள உலக புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். தற்சமயம் வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து குஞ்சியுடன் உலவி வருகின்றன.

இந்த சீசன் வரும் ஏப்ரல், மே மாதம் வரை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது வரை 40 ஆயிரம் பறவைகள் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் பரவி வரும் கொரோன வைரஸ் பீதி காரணமாக இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வரும் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், மறு உத்தரவு வந்தவுடன் மீண்டும் சரணாலயம் திறக்கப்படும் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.

What do you think?

-1 points
Upvote Downvote

கொரோனா வைரஸ் பரவியதாக போலி பிரேக்கிங் நியூஸ் – 3 இளைஞர்கள் கைது

தமிழகத்தில் 37 பேருக்கு கொரோனா!