கர்நாடகாவில் களமிறங்கிய கொரோனா; 4 பேருக்கு நோய் தொற்று உறுதி

இந்தியாவிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று கர்நாடகாவில் 4 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் உருவாகிய கொரோனாவால் உலகமே பெரும் பதற்றத்தில் இருந்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நோய் தொற்று இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவில் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

What do you think?

ம.பியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த பாஜக?

Yes Bank முறைகேடு – சிபிஐ வழக்குப் பதிவு