கொரோனா வைரஸ்: தென்கொரியாவிலும் கணக்கை தொடங்கியதா!!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் தொடர்ந்து உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது தென்கொரியாவையும் இந்த வைரஸ் மிரட்டி வருகிறது.

சீனாவின் வுகான் நகரில் இருந்து உருவாகிய கொரோனா வைரஸ், சீனவை கடந்து உலகின் 25 நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதுவரை சீனாவில் மட்டுமே அதிகளவில் மரணங்களும் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் இன்று வரை 2,233 பேர் உயிரிழந்துள்ளனர், 75,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் கிடைத்துள்ள தகவல் உலகின் அனைத்து நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சீனவை தொடர்ந்து தென்கொரியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஏற்கெனவே அந்நாட்டில் 156 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில், தற்போது மேலும் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் உலகின் மற்ற நாடுகளும் கொரோனா வைரஸ் குறித்து அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.

What do you think?

ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கட் விலை உயர்வு

டிக்-டாக் வீடியோ எடுத்த மாணவன் கைது