கொரோனா வைரஸ் – சீனாவை ஓவர்டேக் செய்யும் ஈரான், இத்தாலி

சீனாவை மிரட்டி வந்த கொரோனா வைரஸ், தற்போது உலகின் மற்ற நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுகான் நகரித்திலிருந்து பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் மட்டும் இதுவரை 2800க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. மருந்து கண்டுபிடிப்பதில் உலக சுகார அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது, ஆனாலும் இன்னும் முழுமையாக பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், சமீபத்திய தகவலின் படி சீனாவை விட அதிவேகமாக உலகின் மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதியாகியுள்ளது.

மாசுமே எப்டெகார்

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் ஈரான், இத்தாலி ஆகிய நாடுகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. அந்நாட்டில் இருந்து பயணம் மேற்கொள்பவர்களால் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் உயர்மட்ட அதிகாரிகள் பலர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் பெண்கள் மற்றும் குடும்பநல விவகாரங்களின் தலைவர் மாசுமே எப்டெகாருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

சீனா, ஜப்பான், தென் கொரியா, ஈரான், இத்தாலி உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து நாட்டு அரசுகளும் திறன்பட செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

What do you think?

2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைவு : திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து!

டெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு!