‘சென்னையில் 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி’

அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறது.

நேற்று ஓமன் நாட்டிலிருந்து சென்னைக்கு திரும்பிய 45 வயதுமிக்க தமிழர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தெரிவித்த விமான நிலைய மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த சிறுவனை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

What do you think?

தமிழகம் வந்திறங்கியது கொரோனா! – காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு தீவிர சிகிச்சை

இன்று மகளிர் தினத்தில் உலககோப்பையை வெல்லுமா இந்திய மகளிர் அணி!