இந்தியாவில் மீண்டும் தினசரி கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100 கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று(மார்ச்.08) 3,993 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 4,575 ஆக குறைந்துள்ளது.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,29,75,883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 7,416 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,13,566 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று(மார்ச்.08) 108 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 145 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 5,15,355 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று(மார்ச்.08) 49,948 ஆக இருந்த நிலையில்,தற்போது ஆக 46,962 குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,79,33,99,555 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 18,69,103 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.