‘ஜேம்ஸ் பாண்டையும் பாதித்த கொரோனா’

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 80 நாடுகளுக்கு மேலாக பரவி மிகப்பெரிய அளவில் பீதியை கிளம்பியுள்ள விஷயம் என்றால் அது கொரோனா வைரஸ் தான். இதனால் தற்போது வரை உலகம் முழுவதும் 3, 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸால் பல நாடுகளிலும் பல அடிப்படை விஷயங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த கொரோனா ஜேம்ஸ் பாண்ட் படத்தையும் விட்டுவைக்கவில்லை. ஆம், ஜேம்ஸ் பாண்ட் படங்களில் 25வது படமான No Time To Die என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரேக், வில்லனாக ஆஸ்கர் விருதை வென்ற மாலெக் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வரும் ஏப்ரல் 8 ல் வெளியாக இருந்த இந்த திரைப்படம் அமெரிக்காவில் நவம்பர் 12ம் தேதியும், லண்டனில் நவம்பர் 25ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

‘கர்நாடகாவில் நிகழ்ந்த கோர விபத்து’ தமிழக பக்தர்கள் 10 பேர் பலி!

‘புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை’ ஒரு சவரன் தங்கத்தின் விலை இவ்வளவா?