‘பெங்களூரை சேர்ந்த பொறியாளருக்கு கொரோனா வைரஸ்’ தெலுங்கானாவில் கண்டுபிடிப்பு!

Medical staff in protective suits treat a patient with pneumonia caused by the new coronavirus at the Zhongnan Hospital of Wuhan University, in Wuhan, Hubei province, China January 27, 2020. Picture taken January 27, 2020. China Daily via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. CHINA OUT.

பெங்களூரை சேர்ந்த 24 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த கொரோனா வைரஸால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.89,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா மட்டுமில்லாது தென்கொரியா,ஜப்பான்,ஈராக்,துபாய்,இத்தாலி,பிரான்ஸ் மற்றும் ஸ்விட்சர்லாந்து என உலகம் முழுவதும் பரவி வருகிறது.இந்த நோயை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸின் பாதிப்பு இருக்கிறது.ஏற்கனவே சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவி உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் இருந்து அது குணமானது.

இந்நிலையில் டெல்லி மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த இருவருக்கு கொரோனா இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது. இத்தாலிக்கு சென்றுவிட்டு திரும்பியதால் டெல்லி நபருக்கும், துபாய் சென்றுவிட்டு திரும்பியதால் தெலுங்கானாவை சேர்ந்தவருக்கும் கொரோனா பரவியதாக கூறப்படுகிறது.இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த 24 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெங்களூரிலிருந்து ஹைதராபாத்திற்கு பேருந்தில் வந்த அந்த நபருக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தியதில் உறுதி செய்யப்பட்டதாக தெலுங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

What do you think?

CAA, NRC, NPR-க்கு எதிராக கோவையில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்திய மனிதநேய ஜனநாயக கட்சி!

‘என் மனைவி உனக்கு,உன் மனைவி எனக்கு’ சென்னையை ஆட்டிப்படைக்கும் மோசமான விளையாட்டு!