சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்த எதிர்கட்சி தலைவர் முக .ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் துரை முருகன் உள்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

What do you think?

‘கொரோனா வைரஸ் குறித்து சென்னை மக்கள் கவனத்தில் கொள்ளவில்லை’ அஸ்வின் வேதனை!

‘கொரோனாவால் தடைப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு’ 26ம் தேதி வரை ம.பி சட்டப்பேரவை ஒத்திவைப்பு!