சுகாதாரத்துறை அமைச்சரையும் தாக்கிய கொரோனா வைரஸ்!

இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால், இங்கி‌லாந்தில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் 6 பேர் உயிரிழந்துள்‌ளனர், 382 பேர் பாதிக்கப்‌பட்டுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சரையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.இங்கிலாந்தின் சுகாதாரத்துறை அமைச்சரான நாடின் டோரிஸ் தற்போது 62 வயதாகிறது. இந்த கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட பின்பு அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.‌ மேலும் அவரை ‌சமீபத்தில் சந்தித்தவர்களை பரிசோதிக்க இங்கிலாந்து சுகாதாரத் துறை முடிவு செய்துள்‌ளது.

nadine dorriesக்கான பட முடிவுகள்
நாடின் டோரிஸ்

அவர் கடந்த 8-ஆம் தேதி, பிரதமர் போரிஸ் ஜான்சன்‌ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்க மகளிர் தின நிகழ்ச்சியில் நாடின் டோரிஸ் ‌கலந்து கொண்டார்.

மேலும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். இதனால் அவரை தொடர்பு கொண்ட நபர்கள் அனைவரையம் பரிசோதிப்‌பதில் பெரும் சிக்கல் எழுந்துள்‌ளது.

What do you think?

மோடி, ஜோதிராதித்ய சிந்தியா இணைப்பிற்கு பாலமாக செயல்பட்டவர் இவரா?

‘ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும்’ ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் கோரிக்கை!