அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு..! அமைச்சர் பொன்முடி துவக்கம்..!
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 % சிறப்பு பிரிவின் கீழ் உள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.
சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்பில் 7.5 % சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடங்கி வைத்தார். இணையதளம் வாயிலாக தொடங்கிய இந்த கலந்தாய்வில் மாணவர்கள் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் இணையதளம் www. tneaonline.org வாயிலாக கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதன்படி, மாற்றுத்திறனாளி பிரிவில் உள்ள 664 இடங்களுக்கு 111 மாணவர்களும் விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் உள்ள 38 இடங்களுக்கு 282 மாணவர்களும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் பிரிவில் உள்ள 11 இடங்களுக்கு 11 மாணவர்களும் இன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள விண்ணப்பித்து உள்ளனர்.
மேலும் கல்லூரிகளை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு இன்று இரவு தற்காலிக ஒதுக்கிட்டு சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று நடைபெறும் கலந்தாய்வில் இடம் கிடைக்காத சிறப்பு ஒதுக்கிட்டு பிரிவு மாணவர்கள் பொதுப் பிரிவு கலந்தாய்விலும் கலந்து கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு 8 பொறியியல் கல்லூரிகள் தங்களது மாணவர் சேர்க்கையை நிறுத்திக் கொண்டதாகவும் புதிதாக மூன்று கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் அதனுடன் தமிழ்நாட்டில் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளில் இரண்டு லட்சத்து 40 ஆயிரத்து 91 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
மேலும், வருகிற 25-7-2024ம் தேதி அன்று பொது சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு (விளையாட்டு பிரிவு மாணவர்கள் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு ) நடைபெறும் அதனைத் தொடர்ந்து 29.07.2024ஆம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..